ஆந்திரா காலிஃப்ளவர் ஊறுகாய் PHOTO: Srividya Raman |
தேவையான பொருள்கள்
காலி ஃப்ளவர் - ஒரு பூ
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டம்ளர்
கடுகு பொடி - - ஒரு டம்ளர்
கடுகு பொடி - - ஒரு டம்ளர்
கடலை எண்ணெய் - ஒன்றரை டம்ளர்
எலுமிச்சை சாறு - ஒரு டம்ளர்
பூண்டு - 5 பல்
கல் உப்பு - - ஒரு டம்ளர்
காலிஃப்ளவர் PHOTO: Srividya Raman |
காலிஃப்ளவரை சுத்தம் செய்து, பூ பூவாக ஆய்ந்து கொள்ளவும். மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது கல் உப்பு போட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து வெய்யிலில் காய வைக்கவும். மூன்று நாட்கள் வெய்யிலில் காய வைக்க வேண்டும்.
கடுகு பொடி சேர்க்கவும். கடுகை வறுக்காமல் பொடி செய்து சேர்க்க வேண்டும்.
கல் உப்பை மிக்சியில் போட்டு பொடித்து சேர்க்கவும்.
மிளகாய் பொடி, கடுகு பொடி, உப்பு இவை மூன்றையும் நன்கு கிளறி விடவும்.
பூண்டு சேர்க்கவும். தோல் உறித்த பூண்டு பற்களை அப்படியே சேர்க்கலாம்.
கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - இரண்டில் ஒன்றை காய்ச்சாமல் அப்படியே சேர்க்கவும்.
கடலை எண்ணெயை நன்கு கிளறி விட்டு, எலுமிச்சை சாறையும் சேர்க்கவும்.
திரும்ப நன்கு கிளறி விட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மூடி வைக்கவும். மூன்று நாட்களுக்கு பிறகு ஊறுகாயை பயன்படுத்தலாம்.
அவ்வளவுதான்...
|
No comments:
Post a Comment