அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட் குல்சா |
இது தவிர பிற தானியங்களை கொண்டு தயாரிக்கப் படும் அக்கி ரொட்டி, மிஸ்ஸி ரொட்டி, ஜோவார் ரொட்டி போன்றவையும் சில பகுதிகளில் பிரபலமான உணவுகள்.
தாவாவில் தயாரிக்கப் படும் ரொட்டிகள், தந்தூரி முறையில் தயாரிக்கப் படும் ரொட்டிகள் என்ற இரு வகைகளும் மேலே சொன்னவற்றில் அடங்கும்.
உருளை கிழங்கு, பனீர், மேத்தி (வெந்தய கீரை) போன்றவற்றை உள்ளே வைத்து செய்யப் படும் stuffed ரொட்டிகளும் உண்டு..
பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒன்றுபோல் தோன்றினாலும், இவற்றின் சுவையில் வேறுபாடு உண்டு.
சில மாதங்களுக்கு முன் அமிர்தசரஸ் சென்றிருந்தேன். அமிர்தசரஸ் குல்ச்சா ரொம்பவும் பிரபலம் என்றார்கள். விசாரித்ததில் அமிர்தசரசில் உள்ள குல்ச்சா லாண்ட் (Kulcha Land, Amritsar) பற்றி சொன்னார்கள்.
குல்ச்சா லாண்ட் சென்றோம். குல்ச்சாவும் லஸ்சியும் மட்டுமே விற்கிறார்கள்.
தந்தூரி முறையில் குல்ச்சா தயார் செய்கிறார்கள்.
மைதா மாவில்தான் குல்ச்சா தயாரிக்கிறார்கள். கோதுமை மாவு போல், மைதா மாவு உடல் நலத்திற்கு நல்லது அல்ல. ஆனாலும் மனம் கேட்பதில்லையே. இந்த குல்ச்சாவின் சுவையில் சொக்கிப் போய்விடுகிறோமே. என்ன செய்ய?
குல்ச்சாவில் மூன்று வகை கிடைக்கிறது:
தந்தூரி முறையில் குல்ச்சா தயார் செய்கிறார்கள்.
மைதா மாவில்தான் குல்ச்சா தயாரிக்கிறார்கள். கோதுமை மாவு போல், மைதா மாவு உடல் நலத்திற்கு நல்லது அல்ல. ஆனாலும் மனம் கேட்பதில்லையே. இந்த குல்ச்சாவின் சுவையில் சொக்கிப் போய்விடுகிறோமே. என்ன செய்ய?
குல்ச்சாவில் மூன்று வகை கிடைக்கிறது:
மசாலா குல்ச்சா
அம்ரித்சாரி குல்ச்சா
பனீர் குல்ச்சா
அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட் குல்சா |
மசாலா குல்ச்சா சற்றே காரமாக இருக்கிறது..
பனீர் குல்ச்சா அருமை.
ஆனாலும் அம்ரித்சாரி குல்ச்சாதான் டாப் ஸ்டார்.. உருளை கிழங்கை உள்ளே வைத்து செய்வதே அம்ரித்சாரி குல்ச்சா. அமிர்தசரஸ் நகரில் கிடைக்கும் உருளை கிழங்கின் சுவையே தனி.
தந்தூரி அடுப்பில் இருந்து நேராக சுடச் சுட தருகிறார்கள். குல்ச்சாவின் மேல் பகுதி நெய்யில் குளித்து இருக்கிறது. சுடச் சுட, நெய் மணக்க சாப்பிடும் அனுபவமே அலாதிதான்..
தந்தூரி அடுப்பில் குல்ச்சா வெந்ததும் எடுத்து, சூடு ஆறுவதற்குள், கை நிறைய வெண்ணெய் அள்ளி குல்ச்சா மேல் போடுகிறார்கள். சூட்டில் வெண்ணெய் உருகி குல்ச்சா முழுவதும் பரவி விடுகிறது. வெண்ணெய் உருகி விடுவதால் ஏறக்குறைய நெய்யின் சுவை கிடைக்கிறது. உருகிய வெண்ணெய் குல்ச்சாவின் மேல் மினு மினுக்கிறது. அந்த மினு மினுப்பு நம்மை மயக்குகிறது.
சன்னா மசாலா |
இரண்டு வகை சப்ஜி தருகிறார்கள்.
ஒன்று சன்னா மசாலா. அமிர்தசரஸ் நகரில் உருளை கிழங்கிற்கு அடுத்தபடியாக சன்னா தான். எந்த உணவகம் சென்றாலும் சன்னா மசாலா கட்டாயம் உண்டு. சன்னாவை எட்டு மணி நேரமாவது ஊற வைப்பார்கள் என நினைக்கிறேன். அவ்வளவு சாஃப்ட் ஆக இருந்தது. காரமும் சுவையும் மணமும் சன்னாவில் இரண்டற கலந்து நம் நாவை அதன் சுவையில் கட்டிப் போடுகிறது.
இரண்டு குல்ச்சாவும் ஒரு கிளாஸ் லஸ்சியும் சாப்பிட்டால் போதும். வயிறும் மனமும் நிறைந்து விடும்.
குல்ச்சா சாப்பிட்டதும் சாப்பிட.... |
அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட் |
அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட் |
அமிர்தசரஸ் குல்ச்சா லாண்ட் |
No comments:
Post a Comment