அமிர்தசரஸ் ஃபேமஸ் குல்ஃபா (Amritsar Famous Kulfa) |
குல்ஃபா. .
NO...NO....
"குல்ஃபிக்கு பதில் குல்ஃபா என்று தப்பாக சொன்னேன்" என்று நினைக்க வேண்டாம்.
குல்ஃபா.
அமிர்தசரஸ் குல்ஃபா.
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸுக்கு ஒரு முறை Food Tour சென்று வந்தவர்களுக்கு குல்ஃபா என்றதுமே வாயூறும்.
அது என்ன குல்ஃபா?
சந்தர்- அமிர்தசரஸ் பேட்டரி ஆட்டோ ஓட்டுநர் |
இதே கேள்வியை தான், நான் பயணித்த பேட்டரி ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டேன். சந்தர் என்ற அந்த ஆட்டோ ஓட்டுனர் நல்ல tour guide ஆகவும் இருந்தார்.
"அமிர்தசரஸ் நகரிலேயே மிகச் சிறந்த குல்ஃபா கடைக்கு உங்களை அழைத்து செல்கிறேன்" என்று ஹிந்தியில் சொல்லி மென்மையாக சிரித்தார். அந்த சிரிப்பிலே இருந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
அமிர்தசரஸ் ஃபேமஸ் குல்ஃபா கடை |
அவர் நம்மை அழைத்து சென்ற இடம் Famous Kulfa Shop.
திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே இருந்த மைக்கேல் ஐஸ்க்ரீம் கடைபோல் இருந்தது.
ஆர்வத்தோடு குல்ஃபா ஆர்டர் செய்தோம்..
குல்ஃபா?
பஞ்சாப் குல்ஃபிக்கு கொஞ்சம் தூரத்து சொந்தம். நம்ம மதுரை ஜிகர்தண்டா, சென்னை ஃபலூடாவிற்கெல்லாம் ரொம்பவே நெருங்கிய சொந்தம்.
பஞ்சாப் குல்ஃபி, ஃபலூடா சேமியா, ரோஸ் சிரப், மலாய் ரப்ரி, பாதாம் பிசின், ஐஸ் க்ரீம் - இவற்றையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாக போட்டு தருகிறார்கள்.
"அட....அவ்வளவுதானா?" என்று நினைக்க வேண்டாம்.
ஏழூ ஸ்வரங்கள் சேர்ந்து நம் காதுகளுக்கு இனிமையான இசை தருவது போல, ஆறு விதமான சுவைகள் ஒரே நேரத்தில் உங்கள் சுவை மொட்டுக்களை தாக்கும். அட....அட....கொஞ்ச நேரத்திற்கு குல்ஃபா சுவையில் சொக்கிப் போய் விடுவீர்கள்.
குல்ஃபா சேமியா (Noodles for Kulfa) |
குல்ஃபி |
குல்ஃபா ரப்ரி (Rabri for Kulfa) |
ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்ததும் அதீத குளிர்ச்சியும், அதிக இனிப்பும் புது விதமான உணர்வை தரும். அடுத்து நாம் மெல்லும் பலூடா சேமியா அதிக படியான இனிப்பை சற்றே மட்டுப் படுத்தும். "அப்படி எல்லாம் இனிப்பை குறைக்க நான் விட மாட்டேன்" என்று வந்து நிற்கும் ரோஸ் சிரப்பும், மலாய் ரப்ரியும். 'நான் இருக்கிறேன்' என்று அமைதியாக தலை காட்டும் பாதாம் பிசின்..
அட...இவ்வளவு நன்றாக இருக்கிறதே. இன்னொன்று சாப்பிடலாம் என்றால் முடியாது. ஒரு குல்ஃபாவில் வயிறு நிறைந்து விடும்.
ஐம்பது ரூபாயில் 'அன்லிமிட்டட் மீல்ஸ்' சாப்பிட்ட திருப்தி.
நீங்கள் அமிர்தசரஸ் சென்றால் கட்டாயம் குல்ஃபா சாப்பிட்டு பாருங்கள்.
ஃபேமஸ் குல்ஃபா , A1 குல்ஃபா - இந்த இரண்டு கடைகளுக்கும் கட்டாயம் சென்று, சுவைத்து மகிழுங்கள்.
ஃபேமஸ் குல்ஃபா , A1 குல்ஃபா - இந்த இரண்டு கடைகளுக்கும் கட்டாயம் சென்று, சுவைத்து மகிழுங்கள்.
அமிர்தசரஸ் ஃபேமஸ் குல்ஃபா கடை |
Amritsar Famous Kulfa Shop Menu |
குல்ஃபா (Amritsar Famous Kulfa Shop Kulfa) |
No comments:
Post a Comment