Friday, 3 January 2014

பஞ்சாமிர்த துவையல்



பஞ்சாமிர்த துவையல்


                                              திரு. சாரங்கராஜன் 



என் மனைவியின் மாமா திரு.   சாரங்கராஜன் சொன்ன ரெசிப்பி இந்த பஞ்சாமிர்த துவையல் (Panchamirtha thuvaiyal). 

தற்போது ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் சாரங்கராஜன் பாரத ஸ்டேட் வங்கயில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். கடந்த 2000 ஆண்டு வாக்கில் விருத்தாசலத்தில் இருந்த போது, விருத்தாசலம் மெயின் ரோட்டில், காவல் நிலையம் பின்னால் இருந்த சாய் மெஸ்சில் பஞ்சாமிர்த துவையலை சாப்பிட்டிருக்கிறார். கருவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய், தக்காளி, புளி என ஐந்து விதமான சுவைதரும் பொருள்கள் இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம். கதம்பமான சுவையும் நன்றாக தானிருக்கிறது.

என்ன தேவை?

உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு -  2 ஸ்பூன்
வர மிளகாய்      - 4 to 6 
பெருங்காயம்    - சிறிது
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
கொத்தமல்லி தழை - இலையாக உருவி அரை கைப்பிடி
தேங்காய் -  2 பல்லு
புளி              -  கோலிகுண்டு அளவு
இஞ்சி           -  ஒரு இனுக்கு 
தக்காளி       - பொடியாக நறுக்கி 1 பழம்
உப்பு           - 1/2 ஸ்பூன்

எப்படி செய்வது?

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வர மிளகாய், பெருங்காயம் - இவற்றை போட்டு சிவக்க வறுக்கவும். கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, இஞ்சி, தக்காளி சேர்த்து திரும்பவும் ஒரு பெரட்டு பெரட்டவும். ஆறின பின், தேங்காய், புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.











பஞ்சாமிர்த  துவையல் 
(Panchamirtha thuvaiyal)
இட்லி தோசை சப்பாத்தி  இவற்றுக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கிறது. மேலும் மோர் சாதத்திற்கு தொட்டு கொண்டாலும் அருமையாக இருக்கிறது. மாலை வரை கெடவில்லை.  நிறைய அளவு செய்ய வேண்டி இருந்தால் ஒரு பிடி பொட்டு கடலையும் இரு பச்சை மிளகாயும் வைத்து  அரைக்கலாம்.

1 comment:

Sundarramg said...

பழனி என்றால் பஞ்சாமிர்தம்,பஞ்சாமிர்தம் என்றால் பழனி என்பது போல பஞ்சாமிர்த துவையல் என்றால் தலைவாழை விருந்து நினைவுக்கு வரும் இனிமேல்.ஒன்றை கூட விடாமல் அனைத்தையும் துவைத்து எடுக்கும் உங்களுக்கு ஒரு ஷொட்டு!

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...