Thursday 7 November 2013

பிரபல சமையல் நிபுணர் டர்லா தலால் மறைந்தார்

டர்லா தலால் (Tarla Dalal)

பிரபல சமையல் கலைஞர் டர்லா தலால் அவர்கள் நேற்று (06-11-2013) மாரடைப்பால், மும்பையில் காலமானார். 77 வயதான டர்லா தலால், இந்தியாவின் முதல் பிரபல சமையல் கலைஞர் (celebrity chef) ஆவார். 45  வருடங்களுக்கும்  மேலாக சமையல் துறையில் கோலோச்சியவர் டர்லா தலால். சமையல் வகுப்பு எடுப்பதில் துவங்கிய அவரது சமையல் வாழ்க்கை, சமையல் புத்தகம் எழுதுவது, தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, சொந்த தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, இணைய தளம் நடத்துவது என்று விரிந்து கொண்டே சென்றது. 1௦௦ க்கும் அதிகமான சமையல் கலை புத்தகங்கள் எழுதியுள்ளார். மலைக்க வைக்கும் 17,000க்கும் அதிகமான சைவ உணவு recipe களுக்கு சொந்தக்காரர்.      "Cook It Up With Tarla Dalal "     அவரது பிரபலமான டிவி நிகழ்ச்சி.

உலக உணவுகளை இந்திய பாணியில் செய்ய கற்று கொடுத்தவர் Tarla Dalal. இந்தியாவின் பல பகுதிகளின் உணவுகள், வட இந்திய உணவுகள், குறிப்பாக குஜராத்தி உணவுகள் என்று மிக விரிந்த சமையல் சாம்ராஜ்யம் டர்லா தலாலுக்கு சொந்தமானது.

இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ  விருது பெற்றவர் டர்லா தலால்.

அவரது Facebook பக்கத்தில் 5000க்கும் அதிகமானோர், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். குஜராத் முதல் அமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்கள், டர்லா தலால் மறைவுக்கு Twitterல் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Wikipediaல்  டர்லா தலால் மறைவு செய்தி உடனடியாக update செய்யப் பட்டுள்ளது.

மறைந்த பிரபல சமையல் கலை நிபுணர் டர்லா தலால் அவர்களுக்கு தலைவாழை விருந்தின் அஞ்சலிகள்.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...