Wednesday 8 January 2014

இட்லி ஃப்ரை

இட்லி ஃப்ரை



 இட்லி - 4

எண்ணெய் - 4 ஸ்பூன்.

இட்லி மிளகாய் பொடி - 4 ஸ்பூன்.







வழக்கம் போல் இட்லி தயார் செய்து ஆற வைக்கவும். இட்லியை சின்ன சின்ன துண்டுகளாக்கவும். இலுப்ப சட்டியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் இட்லி மிளகாய் பொடி போடவும். மிளகாய் பொடி பொரிந்ததும் இட்லி துண்டுகளை போட்டு சிறிது நேரம் பிரட்டவும். அவ்வளவுதான். இட்லி ஃப்ரை தயார்.


இட்லி



இட்லி  சின்ன சின்ன துண்டுகள்







இட்லி ஃப்ரை

காலை டிபனுக்கு செய்த இட்லி மீதமானால்,  அவற்றை வீணடிக்காமல் மாலையில் இட்லி ஃப்ரை ஆக்கி விடலாம். இப்போதெல்லாம் இட்லி மீதம் இல்லையென்றால் கூட இதற்காகவே இட்லி தயாரித்து  ஃப்ரை செய்கிறோம். மாலை நேர காபியுடன் சாப்பிட சிறந்தது இட்லி  ஃப்ரை . இதை தயார் செய்ய அதிக நேரமும் பிடிக்காது. ஹோட்டல்களில் கிடைக்கும் Fried idli ஐ விட இது ஆரோக்கியமானது. பயணங்களின் போது, இட்லி pack செய்து எடுத்து செல்பவர்கள் அவற்றின் மீது எண்ணெய் மிளகாய் பொடி தடவி எடுத்து செல்வார்கள். எண்ணெய், மிளகாய்பொடி இரண்டும் ஊறி சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். இட்லி ஆறிவிட்டதே தெரியாது. அந்த இட்லியின் சூடான version தான் இந்த இட்லி  ஃப்ரை.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...