தஞ்சாவூர் போளி |
இன்று ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவில் ஜேசுதாஸ் பாடினார். மவுண்ட் பேட்டன் மணி ஐயர் சாப்பாட்டுக் கச்சேரிக்கு செல்ல இதுதான் சரியான தருணம். சென்றிருந்தேன். செம கூட்டம். ஏழு வகை ஸ்வீட்டில் தொடங்கி பில்டர் காபி வரை மொத்தம் 38 வகையான சிற்றுண்டிகள். டபுள் டெக்கர் இட்லி, சாக்கலேட் தோசை, மோர்குழம்பு இட்லி, மோர்குழம்பு வடை, இளநீர் இட்லி, குழாபுட்டு, குழி பணியாரம், சாட் கவுண்டர் ......கலக்கல் மெனு. ஏழு வகை ஸ்வீட் என்று சொன்னது இன்றைய மெனு மட்டும்தான். தினம் மாறும் இனிப்பு வகைகளை எண்ணினால் இரண்டு டஜன் தாண்டும்.
வாழை பூ வடை - நல்ல சுவை |
தஞ்சாவூர் போளி சாப்பிட்டேன். சாப்பிட வேண்டிய இனிப்பு.
போளி தெரியும். அது என்ன தஞ்சாவூர் போளி? மவுன்ட் பேட்டன் மணி ஐயரின் புதல்வர் திரு. சீனிவாசனிடம் கேட்டேன்.
" பொதுவாக போளி செய்யும்போது இரண்டு வகையான பூரணம் வைப்பார்கள். பருப்பு பூரணம் மற்றும் தேங்காய் பூரணம். பருப்பு சேர்த்த பூரணம் வைத்து செய்தால் பருப்பு போளி. தேங்காய் சேர்த்த பூரணம் வைத்து செய்தால் தேங்காய் போளி. நாங்கள் செய்யும் போளியில் அதிக அளவு கடலை பருப்போடு குறைவான அளவில் தேங்காய் சேர்த்து செய்த பூரணம் வைக்கிறோம்.வெல்லம், ஏலக்காயும் உண்டு. அதுதான் தஞ்சாவூர் போளி " என்றார் சீனிவாசன்.
போளி மகாராஷ்டிராவின் சிறப்பு இனிப்பு. மராத்தி அரசர்கள் தஞ்சையை ஆண்டபோது தஞ்சைக்கு வந்த இனிப்பு போளி. சர்க்கரை, தேங்காய் பூரணம் வைத்து, சர்க்கரை பாகில் தோய்த்து எடுக்கப் படும் சுருள் போளியும் தஞ்சை பகுதியில் பிரபலம்.
சங்கீத சக்கரவர்த்திகளின் படங்களுடன் அமர்க்களமான சினிமா செட் போன்ற வடிவமைப்பு.
இனி கல்யாண சாப்பாட்டு பந்திக்கு தோட்டா தரணியை வைத்து செட் போட்டாலும் போடுவார்கள், இந்த கேட்டரிங் காரர்கள்.
நிற்க. அதிக எண்ணிக்கையிலான உணவு பண்டங்கள், சங்கர் படம் போன்ற லொக்கேஷன் ......இதை தாண்டி சொல்லிக் கொள்ளும்படியான சுவையில்லை-சில உணவுகள் தவிர.
இங்கு சுவை என்று நான் குறிப்பிடுவது நமது பாரம்பரிய உணவுகளின் உண்மையான சுவையை. காஞ்சிபுரம் இட்லியும், தவல வடையும் சாப்பிட்டேன். இலையில் வைத்து கொடுத்த ஜோடனை தவிர, அது காஞ்சிபுரம் இட்லியே அல்ல. தவல வடையும் ditto. அதை பருப்பு வடை என்று சொல்லி இருந்தால் ஒப்புக் கொள்ளலாம். யாருக்கு வேண்டும் பாரம்பரியம் எல்லாம். அழகிய நாமகரணம், புதுசு புதுசான fusion உணவுகள். கூட்டம் சேர்ந்து விடுகிறது.
பில்டர் காபி அற்புதம்.
அத்தி பழ ஹல்வா superb.
விலை தவிர - காபி முப்பது ரூபாய், இனிப்புகள் 50 ரூபாய். காஞ்சிபுரம் இட்லி போன்ற சிறப்பு உணவுகள் (தம்மா துண்டு இட்லி மாவு தான் ஊற்றி இருப்பார்கள்) 70 ரூபாய், மதிய சாப்பாடு 210 ரூபாய், சாப்பாடு பார்சல் 230 ரூபாய் -வேறு எதுவும் சொல்லிக் கொள்ளும் படி இல்லாததால் வெறும் போட்டோ கேலரி மட்டும்.
சாப்பிட வாங்க |
குழா புட்டும் குழி பணியாரமும் |
No comments:
Post a Comment