சிவப்பு அவலில் செய்த சிறப்பு பாயசம். செய்ய மிகவும் எளிதானது.
அவல் பாயசம் |
சிவப்பு அவல் - 1 கப்
வெல்லம் - 1 கப்
பால் - 200 மி.லி.
சாரை பருப்பு
முந்திரி
உலர் திராட்சை
ஏலக்காய்
பிஸ்தா
அவலை நன்கு களைந்து, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும். கொதிக்கும் போதே, முந்திரி, சாரை பருப்பு, உலர் திராட்சை, பிஸ்தா இவற்றையும் சேர்க்கவும்.
இன்னொரு அடுப்பில், பாலை வைத்து, சுண்ட காய்ச்சவும்.
அவல் வெந்ததும், வெல்லம், ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்கு கரைந்ததும், காய்ச்சிய பாலை சேர்த்து, மீண்டும் ஒரு கொதி விடவும்.
அவல் பாயசம் ரெடி.
உலர் பழங்களின் சத்து முழுக்க நம்மை சேர வேண்டும் என்பதற்காகவே, அவற்றை நெய்யில் பொரிக்காமல், கொதிக்கும் போது சேர்த்து வேக வைக்கிறேன். முடிந்த வரையில் பொரித்த பதார்த்தங்களை தவிர்ப்பது ஆரோக்கியமானது.
அவல் பாயசம் சுடச் சுட தயாராகிறது |
அவல் பாயசம் |
No comments:
Post a Comment