ஜெய ராகவேந்திராவில் (சென்னை கல்சுரல் அகாடமி) பன்சி கிச்சடி |
மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபா கேண்டீன் |
எல்லா வருடங்களும் போல இந்த வருடமும் எந்த சபா (சாப்பாட்டுக்) கச்சேரியையும் நான் miss பண்ணப் போவதில்லை. கச்சேரி கேண்டீன் பொறுத்தவரை recipe தரப் போவதில்லை. வகை வகையாக சாப்பிட்டு வந்து உங்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வதாக உத்தேசம்.
நேற்று பாஸ்கரன் மீனாம்பிகா கேடரர்ஸ் (மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்), நம்ம வீட்டு கல்யாணம் கேடரர்ஸ் (பிரம்ம கான சபா) இரண்டுக்கும் சென்றிருந்தேன். இன்று ஜெய ராகவேந்திரா கேடரர்ஸ் (சென்னை கல்சுரல் அகாடமி).
பிரம்ம கான சபா கேண்டீன் |
மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் நேற்றுதான் துவக்க தினம். கேண்டீனுக்கு வந்தவர்கள் எல்லோருக்கும் கேசரி இலவசம். ரவா பொங்கல், தேங்காய் சேவை இரண்டும் சாப்பிட்டேன். தேங்காய் சேவை பிரமாதமாக இருந்தது. அப்புறம் பில்டர் காபி. வீட்டை தவிர வெளியில் சாப்பிடும் பில்டர் காபியில் இந்த சபா கேண்டீன் காரர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை. ஹோட்டல்களில் இது போன்ற பில்டர் காபி கிடைப்பதில்லை. காபி விலை இருபது ரூபாய். எந்த டிபன் சாப்பிட்டாலும் 40 ரூபாய். ஸ்வீட் 30 ரூபாய். இதுதான் மேலே சொன்ன 3 கேண்டீன் விலை நிலவரம்.
கட்டாயம் செல்ல வேண்டிய சபா கேண்டீன்களில் ஒன்று மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கேண்டீன்.
பிரம்ம கான சபா கேண்டீன் அவ்வளவு சுகமில்லை. காபி கூட நன்றாக இல்லை. அதனால் இந்த சீசனுக்கு அங்கெ திரும்பி செல்வதாக உத்தேசமில்லை. பிரம்ம கான சபா காரர்களுக்கு கேண்டீனுக்கு என்று தனி ரசிகர்கள் இருப்பது பிடிக்கவில்லை. சங்கீதம் கேட்க வருபவர்களுக்கு ஏதோ போனால் போகிறதென்று சாப்பாடும் கொடுத்தால் போதும் என்கிறார்கள் அவர்கள். ஒதுக்கு புறத்தில் எதோ ஒப்புக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள்.
ஜெய ராகவேந்திரா கேண்டீன் |
ஜெய ராகவேந்திராவில் பருப்பு போளி, வாழைப் பூ வடை, பன்சி கிச்சடி மூன்றும் சுவைத்தேன். மூன்றுமே நல்ல சுவை. சூடாக இல்லாவிட்டால் கூட பருப்பு போளி மீது நெய் ஊற்றி சாப்பிடும்போது அற்புதமாக இருக்கிறது. வாழைப் பூ வடை பெரும்பாலும் ஹோட்டல்களில் கிடைப்பதில்லை. பன்சி கிச்சடி என்பது ஒரு வகை கோதுமை ரவையிலிருந்து செய்யப் படுகிறதாம். வழக்கமான கோதுமை ரவை அல்ல. மாறுபட்ட சுவை. நன்றாக இருந்தது. இந்த ரவை (சென்னை மேற்கு மாம்பலம் ) துரைசாமி சப்வே அருகில் உள்ள பாம்பே ஸ்டோர்ஸில் மட்டுமே கிடைக்கும் என்ற உபரி தகவலையும் தந்தார்கள்.
இதுவரை நான் சென்று வந்த மூன்று கச்சேரி கேண்டீன்களில் என் முதல் சாய்ஸ் ஜெய ராகவேந்திராதான். சிறிய இடம்தான். முன்பெல்லாம் அவ்வளவு சுகாதாரமாக இல்லாதது போல் தோன்றும். இந்த வருடம் பளிச்சென்று சுத்தமாக இருக்கிறது. ஹோம்லி அட்மாஸ்பியர்.
இன்று ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவில் (வாணி மஹால்) ஞானாம்பிகாவின் கச்சேரி ஆரம்பம். இன்று துவக்க தினம் என்பதால் மாலையில் தான் ஆரம்பித்தது. நாளையிலிருந்து காலை பத்தரை மணிக்கு சாப்பாட்டுடன் கேண்டீன் ஆரம்பிக்கும்.
இன்னும் சில சபாக்களுக்கு சென்று வந்தபின் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
1 comment:
ராமன் நாக்கில் எச்சில் உறுகின்றது
தொகுப்பு super
சுந்தர்
Post a Comment