மைசூர் பாக் |
மைசூர் பாக் |
" மைசூர் பாக்கில் மைசூர் இருக்கிறதா? " என்று ஜோக்கடிப்பார்கள். " மைசூர் பாக்கில் மைசூர் இருக்கிறது " என்பேன் நான். மைசூரின் உணவு கலாசாரம் மைசூர் பாக்கில் ஒளிந்திருக்கிறது.
மைசூர் மகாராஜாவுக்காக மாடப்பா என்பவர் செய்து கொடுத்த
பிரத்தியேக இனிப்பு, மைசூர் பாக். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. மைசூர் பாக்குக்கும்
தான். இதை நீங்கள் மைசூர் போனால் உணரலாம். எந்த விளம்பர வெளிச்சமும் இல்லாமல்,
இனிப்பு கடைகளில் கொட்டிக் கிடக்கும் மைசூர்பாக். பெயர் சொன்னாலே போதும். நாக்கெல்லாம் இனிக்கும்.
அதிக நெய்யும், அதிக சர்க்கரையும் தேவைப்படும் இனிப்பு மைசூர் பாக். ஆனாலும், கடிக்க கர கரவென்று இருக்கும். மொறுமொறுப்பு என்றும் சொல்வார்கள். ஆனால் கடிக்க முடியும். இதுதான் மைசூர்பாக்கின் சிறப்பே. வாயில் வைத்த உடன் கரைவதெல்லாம் மைசூர்பாக்கே அல்ல. மைசூர் பாக்கை துண்டு போட்டு அதன் பக்கவாட்டு பகுதியை பார்த்தீர்கள் என்றால், தேன்கூடு போல சிறு சிறு துளைகள் தெரியும். அப்படி தெரிந்தால் அதுதான் authentic mysore pak.

கடலை மாவு - 1 டம்ப்ளர்
சர்க்கரை - 2 டம்ப்ளர்
நெய் - 1 டம்ப்ளர்
ஏலக்காய் - சிறிது
" மொத வேலையா, ஒரு வாணலியில, கொஞ்சம் நெய்ய குத்தி, கடலை மாவ கட்டி தட்டாம வறுத்துக்கணும். அப்புறமா, சக்கரைல கா டம்ப்ளர் தண்ணிய குத்தி, அடுப்பில வச்சு கொதிக்க வைக்கணும். கம்பி பதம் வந்த ஒடனே, வறுத்த மாவ பாகுல கொட்டி, கட்டி தட்டாம கிளறணும். மாவு வெந்து, நொரை நொரையா பூத்துண்டு வரும். அப்ப நெய்ய கொஞ்சம் கொஞ்சமா குத்தி, மாவு சுருண்டு வர்ற வரைக்கும் கைவிடாம கிளறணும். மாவு சுருண்டு கெட்டியானதும், ஏலக்காய் தூள தூவி நெய் தடவி வச்ச தாம்பாளத்தில கொட்டி, கொஞ்சம் ஆறினப்புறமா துண்டு போடணும். ரொம்ப ஆற விட்டா இறுகிடும். அப்புறம் துண்டு போட முடியாது.
சக்கர பாகு பதம் சரியா இருக்கணும். இல்லாம போனா மைசூர் பாகை சுத்தியல வச்சுண்டுதான் ஓடைக்க வேண்டி இருக்குமாக்கும்."
கடலை மாவு |
சக்கரை பாகு |
சக்கரை பாகில் கடலை மாவு |
நெய் ஊற்றி |
நன்கு கிளறி .....
தாம்பாளத்தில் கொட்டி....துண்டு போடவும்
|
No comments:
Post a Comment