|
மைலாப்பூரில் மார்கழி பஜனை
மாதங்களில் மார்கழிக்கு தனி சிறப்புகள் பல உண்டு. " மாதங்களில் நான் மார்கழி " என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அருளினார். மாணவர்களுக்கு கோடை விடுமுறை போல, குடும்ப சுமைகளில் சிக்கி தவிக்கும் சராசரி மனிதர்கள், குடும்ப கடமைகளை மறந்து ஆன்மீகத்தில் திளைக்கும் மாதம் மார்கழி. அதனால்தான் போலும் திருமணம் போன்ற நிகழ்வுகளை இந்த பீடுடை மாதத்தில் வைப்பதில்லை.
மார்கழி அதிகாலை பொழுதில் மைலாப்பூர் எப்படி இருக்கிறது பார்த்து வரலாம் என கிளம்பினேன்.
மாட வீதிகளில் சுற்றிய பொது இரண்டு பஜனை குழுக்கள் இசைத்த பகவான் நாமாவளி கேட்கும் பாக்கியம் கிடைத்தது.
|
மைலாப்பூரில் மார்கழி பஜனை
நமது கலாச்சாரத்தில் மார்கழி அதிகாலை பஜனை முக்கியமானது. எல்லா ஊர்களிலும் பஜனை கோஷ்டியினரை காண முடியும். அனைத்து வீதிகளிலும் வலம் வரும் பஜனை கோஷ்டிக்கு வீட்டு வாசலில் நின்று வரவேற்புகொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவார்கள்.
|
மார்கழி பூ
அது மட்டுமா? வீட்டு வாசலில் அழகிய பெரிய கோலங்கள்...கோலத்தின் நடுவில் சாணி உருண்டையில் பரங்கி பூ வைத்து அலங்காரம்....கார்த்திகை மாத கடைசியிலே மாதம் முழுதும் பரங்கி பூ போடலாமா என்று கேட்டு வருவார்கள். சொற்ப பண செலவில் மார்கழி முழுதும் பரங்கிபூ வீடுதேடி வந்து விடும்.
|
மார்கழி கோலம்
|
மார்கழி கோலம் by யுவனிகா |
யார் வீட்டு கோலம் அழகு என்று ஒரு அறிவிக்கப் படாத போட்டியே நடக்கும்.
மார்கழி அதிகாலை, வீதிகளில் நடந்தாலே ரம்மியமாக இருக்கும்.
இடைவிடாத பஜனை கோஷ்டிகளின் வருகை....பல் கிட்டிப் போகும் குளிரில் பச்சை தண்ணீரில் குளித்து, பொழுது புலரும் முன் கோயிலுக்கு செல்வது ஆனந்தம். பெருமாள் கோவில் வெண் பொங்கல் பிரசாதத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தூக்கலான மிளகு காரத்தில், நெய்யொழுகும் அந்த பிரசாதம்....வீட்டில் நம்மால் செய்ய முடியாத அற்புதம். குளிர் காலத்தில் மிளகு சேர்ப்பது நம்மை குளிர்கால நோய்களில் இருந்து காக்கும்.
இன்று பஜனை கோஷ்டியோடு நடந்தேன். மனதுக்கு இதமாக இருந்தது.
கோலங்களும் பரங்கி பூவும் மிஸ்ஸிங்.
குறைந்தது ஐந்து பஜனை குழுக்கள் மைலாப்பூரில் பஜனை பாரம்பரியத்தை காத்து வருகின்றன.
கோலங்கள் போட்டு, பரங்கிபூ அலங்காரத்திற்கும் யாராவது மெனக்கெட்டால் நல்லது. நல்லவை என்றும் தொடர வேண்டும்.
வேகமாய் சுழலும் கால சக்கரத்தை சில மணித்துளிகள் நிறுத்தி, முன்பு நானறிந்த...இன்று நானறியா மார்கழியை காட்டிய பஜனை குழுவிற்கு நன்றி.
|
மாட வீதிகளில் மார்கழி பஜனை |
|
அதிகாலை மார்கழி பஜனை
|
மார்கழி பஜனை
|
மாட வீதி மார்கழி பஜனை
|
மார்கழி பஜனை ரசனை
|
மயிலாப்பூரில் அதிகாலை குளிரில் மார்கழி பஜனை
|
மார்கழி பஜனை முடிந்ததும் பொங்கல் பிரசாதம் |
மிளகு சேர்த்த பொங்கல் மார்கழி குளிருக்கு நல்லது
1 comment:
ஆஹா அருமையான மார்கழி பதிவு,
Post a Comment