|
மியூசிக் அகாடமி பத்மநாபன் கேண்டீன் காபி க்ளப்
சங்கீத சீசனின் மிக சிறந்த கேண்டீனுக்கு சென்றிருந்தேன். மியூசிக் அகாடமியில் கொண்டித்தோப்பு பதநாபன் நடத்தும் கேண்டீன். ஸ்டார் ஹோட்டலின் ரூப் கார்டனில் நுழைந்த உணர்வு. மெல்லிய சங்கீத ஒலியுடன் சாப்பாட்டு கடை. சாப்பிட்ட அனைத்திலுமே ஓர் அற்புத சுவை தெரிந்தது. சுவை, அட்மாஸ்பியர் இரண்டையும் கணக்கில் கொண்டால் இந்த 2014 சென்னை மார்கழி சங்கீத சீசனின் சிறந்த உணவகம் என்ற விருதினை பத்மனாபனுக்கே தரலாம்.
|
சூடான செரோட்டி கீர் ரெடி
|
மியூசிக் அகாடமி பத்மநாபன் கேண்டீன் சூடான செரோட்டி பாதாம் கீர்
சூடான செரோட்டி பாதாம் கீர் எங்களுக்கு வார்ம் வெல்கம் தந்தது. அவசியம் சாப்பிட வேண்டிய இனிப்பு. அடுத்து ரச வடை. அது ராச வடை. இன்னும் இன்னும் சாப்பிட தூண்டும் சுவை. சூடான வெங்காய பக்கோடா பக்க வாத்தியம் போல் பக்கத்தில் இருந்தது. ஒரு விள்ளல் ரச வடை. வெங்காய பக்கோடா ஒரு கடி. அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது இந்த சுகானுபவத்தை.
|
மியூசிக் அகாடமி பத்மநாபன் கேண்டீன் பொடி தோசை
|
வடை தீர்ந்ததும் மிச்சம் இருந்த ரசத்தில் பக்கோடாவை முக்கி....ரச பக்கோடாவை நாங்களே தயார் செய்து விட்டோம். பக்கோடாவும் ரசமும் சுர பேதமில்லாமல் சேரும் என்பதை இன்றுதான் உணர்ந்தேன்.
அரிசி உப்புமா. வீட்டில் மட்டுமே கிடைக்கும் நன்கு குழைந்த அரிசி உப்புமா. இங்கே கிடைத்தது. பொடி தோசை. குறை சொல்ல முடியாது.
நிறைய வாழைபூ வுடன் வாழைபூ வடை.
பில்டர் காபியுடன் மங்களம் பாடினோம். மறக்க முடியாத அசல் பில்டர் காபி சுவை.
|
கொண்டித்தோப்பு பத்மநாபன் கேண்டீன்
|
காபி கச்சேரி
|
கச்சேரி சமையலறை
|
|
சுட....சுட.....ரவா தோசை |
|
குடும்பத்துடன் கச்சேரிக்கு....
|
No comments:
Post a Comment