Tuesday 29 October 2013

குப்பைமேனி தைலம்

குப்பைமேனி தைலம்                                                                                                         PHOTO: Raman

குப்பை மேட்டில் கூட முளைத்து நிற்கும் செடி குப்பைமேனி. நாம் நடந்து செல்லும் ரோட்டில், கடந்து செல்லும் பாதையில் என எங்கும் காணப் பட்டாலும், நாம் காணாது கடந்து விடுவோம் குப்பைமேனியை. காரணம் இதன் அருமை நமக்கு தெரியாது. என் அம்மாவிற்கு தெரிந்திருந்தது. வீட்டை சுற்றி முளைத்திருக்கும், குப்பைமேனி இலைகளை பறித்து பொரியல் போல் செய்வார். மிக நன்றாக இருக்கும்.

விதைக்க வேண்டாம். உரம் போட வேண்டாம். சிறிய மண் பரப்பு இருந்தால் போதும். தானே தழைத்து நிற்கும் சுயம்பு இந்த குப்பைமேனி. Antibiotic Properties கொண்டது குப்பைமேனி. பலவித infectionலிருந்து நம்மை காக்கும். இதில் உள்ள anti inflammatory properties வீக்கத்தை குறைக்கும்.

இவை எல்லாம் தெரிந்தும், ஏனோ குப்பைமேனியை பயன்படுத்தாமலே இருந்தேன். திருச்சியில் இருக்கும் என் நெருங்கிய நண்பர் திரு. மீனாட்சி சுந்தரம் அவர்களின்  மனைவி திருமதி. ஸ்ரீவித்யா ஒருநாள் சொன்னார், " குப்பைமேனி தைலம் காய்ச்சியிருக்கிறேன்" என்று.

Over to Smt. Srividhya:

" எதற்கு இந்த தைலம்?"

" தோலில் ஏற்படும் பலவித பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்து குப்பைமேனி தைலம்."

Eczema எனப்படும் ஒருவகை தோல் நோய், சிறு குழந்தைகளுக்கு வரும் கரப்பான், தோலில் ஏற்படும் அரிப்பு, சிறு சிறு வெட்டு காயங்கள், bedsoreஇவைகளுக்கு சரியான தீர்வு குப்பைமேனி தைலம். பிரச்சினை உள்ள பகுதியில் இந்த தைலத்தை லேசாக தடவ வேண்டும். இரவு படுக்க போகும் முன் இந்த தைலத்தை உபயோகிக்கலாம். காலை குளிக்க போகுமுன் சிறிது விளக்கெண்ணெய் அல்லது குளித்த பின் moisturizing cream தடவினால் நல்லது. இவ்வாறு பதினைந்து நாள் செய்தால் போதும். " Skin பிராப்ளமா? எனக்கா?" என்று கேட்பீர்கள்.

குப்பைமேனி  மூட்டு வலியை  கூட குறைக்கும். தோல் பொலிவை கூட்டும்.

குப்பைமேனி   இன்னமும் பல வியாதிகளை குணப் படுத்தக் கூடியது.


குப்பைமேனி செடி PHOTO: Sundarramg


குப்பைமேனி செடி 
(விதை மற்றும் இலை அமைப்பை அறிய  இந்த படம் உதவும்)

இப்படித்தான் இருக்கும் குப்பைமேனி செடி. இதன் இலைகளின் shape தனித்துவமானது. கூர்மையான நுனி பகுதியை கொண்டிருக்கும். இலையின் ஓரம் முழுதும் ரம்பம் போல்  இருக்கும். 




குண்டலம், குண்டலமாக அதன் விதைகள் பலஅடுக்குகள் கொண்டதாக இருக்கும். இலை அடுக்குகளுக்கு இடையில் இந்த விதை அடுக்குகள் இருக்கும்.







குப்பைமேனி இலைகள் -  இரண்டு கைப்பிடி அளவு.

தேங்காய் எண்ணெய் - 250 மி.லி.

விளக்கெண்ணெய் - 3 டீஸ்பூன்.







குப்பைமேனி இலைகள் ஆயும் போது கைகள் லேசாக அரிப்பது போல் இருக்கும். பயப்பட வேண்டாம். சிறிது நேரத்திலே சரியாகி விடும்.

குப்பைமேனி இலைகளை கழுவி, ஆய்ந்து கொள்ளவும். தண்ணீர் உலர்ந்ததும் மிக்சியில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும். அறைக்கும் பொது தண்ணீர் விட வேண்டாம். இலைகளில் இயற்கையாக உள்ள நீர் சத்தே போதும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் நன்கு கலக்கவும். பின், அரைத்த குப்பைமேனி விழுதையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை வாணலியில் கொட்டி கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிட நேரம் கொதிக்க விடவும்.
குப்பைமேனி செடி                      PHOTO: Sundarramg
அடுப்பை அணைத்து கொதித்த எண்ணெய் கலவையை ஆற வைக்கவும்.

இப்போது குப்பைமேனி தைலம் தயார்.





 குப்பைமேனி தைலம் தயாராகிறது                                                                      PHOTOS: Srividya Raman



1 comment:

Babu said...

Many thank for brining these kind of article. Nice to know that one of our fellow Trichiaities are brining those forgotten our root medicine to light. Also word of appreciation to Mrs.Meenakshi Sundaram for taking her time out and letting us know the value of "Kuppaimeni"

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...