பாசி பயறு சுண்டல் |
தேவையான பொருள்கள்
பாசி பயறு - 100 கிராம்.
பச்சை மிளகாய் - 1.
வர மிளகாய் - 2.
கருவேப்பிலை - சிறிது.
தேங்காய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
உப்பு
சீரகம் - விருப்பப்பட்டால்
பாசி பயறை வாணலியில் வறுத்து, பின் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் உப்பு போட்டு, தொடர்ந்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும், தண்ணீரை வடித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு வாணலியில் வர மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு, நீர் வடித்த பயறையும் போட்டு நன்கு கிளறவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, துருவிய தேங்காய் தூவவும். இப்போது பாசி பயறு சுண்டல் சுடச் சுட தயார்.
பாசி பயறு , உடைக்காமல், முழு பயறாக (Green Moong Dal-Whole) பயன் படுத்தப் படுவதால், இதில் நார் சத்து அதிகம். நவராத்திரி தினங்களில் மட்டும் அல்லாமல், மற்ற நாட்களிலும் இந்த சுண்டலை சாப்பிடுவது நல்லது. பொதுவாக, உடல் எடை குறைக்க விரும்புவோரும், சர்க்கரை நோய் (Diabetes) உள்ளோரும் மாலை வேளையில் பாசி பயறு சுண்டல் சாப்பிடலாம்.
கொலு கொண்டாட்டம்-மரப்பாச்சி |
No comments:
Post a Comment