மூக்கு கடலை சுண்டல் |
(White Channa-Small)
தேங்காய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
வர மிளகாய் - 3
கருவேப்பிலை
பச்சை மிளகாய் - 2
உப்பு
எல்லா கடலைகளையும் போல இதற்கும் மூழ்கும் அளவு நீர் விட்டு, ஒரு கொதி விட்டு அடுப்பை அணைத்து், மூடி வைக்கவும்.
முக்கால் பதம் வெந்தபிறகு தேவையான உப்பு சேர்த்து, நசுக்கினால் மாவாகும் வரை வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் இவற்றை சிவக்க வறுத்து, ஆறியவுடன் தேங்காய் துருவல், ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்.
பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து, ஒட்ட நீர் வடித்த கடலையை சேர்க்கவும்.
சிறிது பிரட்டி, அரைத்து வைத்த பொடியை தூவி, நன்கு கலந்து இறக்கவும்.
No comments:
Post a Comment