தேவையான பொருள்கள்
கடலை பருப்பு - 100 கிராம்.
பச்சை மிளகாய் - 1.
வர மிளகாய் - 2.
கருவேப்பிலை
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
உப்பு
சீரகம் - விருப்பப்பட்டால்
தேங்காய் - விருப்பப்பட்டால்
கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நசுக்கினால் மாவாகும் பதம் வரும் வரை வேக விடவும். உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு, நீரை வடித்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் தாளித்து, கருவேப்பிலை, பச்சை மிளகாயுடன் கடலை பருபையும் சேர்த்து கிளறவும். இறக்கி வைத்து தேங்காய் துருவலை கலக்கவும். புரதச் சத்து நிறைந்த கடலை பருப்பு சுண்டல் தயார்.
" அதிகம் உண்பதும் தவறு.....அதிக நேர இடைவெளி விட்டு உண்பதும் தவறு " என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த வகையில் பார்த்தால், மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் இடையில், மாலை நேர சிறு உணவாக உட்கொள்ள, சுண்டல் வகைகள் சிறந்தவை.

No comments:
Post a Comment