காராமணி இனிப்பு சுண்டல் |
இன்று (அக்டோபர் 5, 2013) நவராத்திரி விழா துவங்குகிறது. அக்டோபர் 14ம் தேதி விஜயதசமி பண்டிகையோடு நிறைவு பெறுகிறது. துர்க்கை வழிபாடு, லக்ஷ்மி வழிபாடு, சரஸ்வதி வழிபாடு - இவை ஒன்பது இரவுகளின் (நவராத்திரி) முக்கிய அம்சமாகும். பத்தாம் நாள் இரவன்று, அசுரர்களை வதம் செய்த முப்பெரும் தெய்வங்களின் வெற்றியை கொண்டாடுவது விஜயதசமி. இந்த தினங்களில் விரதம் இருப்பது வட மாநில மக்களின் வழக்கம். தமிழ்நாட்டை பொறுத்த வரை....கொலு, பல்வேறு உணவுகள், ஆடை அணிகலன்கள் என்று, பெண்கள் கோலாகலமாக கொண்டாடுவதுதான் நம்ம ஊர் நவராத்திரி. இதை நம் பெண்களின் சமூக திருவிழா என்றும் கூறலாம்.
தலைவாழை விருந்தில் இந்த பத்து நாட்களும் சிறப்பு நவராத்திரி விருந்து வழங்க இருக்கிறோம்.
நவராத்திரி முழுவதும் தலைவாழை விருந்தில் வெளிவரும் உணவு குறிப்புகள் குறித்து உங்கள் comments ஆவலோடு எதிர்பார்க்கப் படுகிறது.
காராமணி -150gms
தேங்காய்- சிறிது
காராமணியை வாணலியில் லேசாக வறுத்து, நீர் விட்டு வேகவைக்கவும். நசுக்கினால் மாவாகும் பதம் வரும் வரை வேக வைத்து, நீரை வடித்து விடவும். வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக்கொள்ளவும். பின்னர், ஒட்ட நீர் வடித்த காரமணியை போட்டு கிளறவும். துருவிய வெல்லத்தையும் போட்டு, மெல்ல கிளறி, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயை சேர்த்து இறக்கவும். ஏலப்பொடியை லேசாக தூவி கடவுளுக்கு படைக்கவும்.
No comments:
Post a Comment