சிவப்பு சிறு காராமணி சுண்டல்-வட இந்திய பாணி |
சிறு (சிவப்பு)காராமணி |
காராமணியில் மூன்று வகை உண்டு. பெரிய சிவப்பு காராமணி, சிறு காராமணி (சிவப்பு) மற்றும் வெள்ளை காராமணி. சிறு காராமணி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. Morarka Organic ல் சிறு காராமணி கிடைக்கிறது.
நவராத்திரி சீசன் என்பதற்கு பதிலாக சுண்டல் சீசன் என்று சொல்லி விடலாம். குறைந்தது ஒரு டஜன் சுண்டல் வகைகள் செய்கிறார்கள். அடிப்படையில் இனிப்பு சுண்டல், கார சுண்டல், மசாலா சுண்டல், பீச் சுண்டல் (தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்), ஒன்றுக்கு மேற்பட்ட பருப்பு வகைகளை கலந்து செய்யும் கதம்ப சுண்டல் என்று சுண்டலை வகைப் படுத்தலாம்.
வழக்கமான சுவையிலிருந்து சற்றே மாறுபட்ட சுண்டலை செய்யலாமே என்று தோன்றியது. அதுதான் வட இந்திய பாணி சுண்டல். Morarka Organic products பெரும்பாலானவை ராஜஸ்தானில் பயிரிடப் படுபவை. அதை வட இந்திய பாணியிலேயே செய்து பார்க்க நினைத்தேன்.
மாறுதலான, நல்ல சுவை கிடைத்தது. இதோ....வட இந்திய பாணி சிறு காராமணி சுண்டல்.
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
வர மிளகாய் -2
கடுகு
உளுத்தம் பருப்பு
காராமணி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி மூடி வைக்கவும். 4 மணி நேரம் ஊறிய பிறகு, அடுப்பில் வைத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்த பிறகு, உப்பு போட்டு தொடர்ந்து வேக வைக்கவும்.
காராமணியை தண்ணீர் வடித்து, எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, கடுகு சேர்த்து தாளித்து சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் கருவேப்பிலை மற்றும் காராமணியை சேர்த்து கிளறவும். ஒரு பாத்திரத்துக்கு சுண்டலை மாற்றி சூடு ஆறுவதற்குள் chat மசாலாவை கலந்து பரிமாறவும். விருப்பப்படுவர்கள் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment