சாமை பாயசம் |
சாமை அரிசி
பால்
வெல்லம்
முந்திரி
பாதாம்
பிஸ்தா
வால்நட்
உலர்ந்த திராட்சை
நெய்
சாமை அரிசியை தண்ணீரில் நன்கு களையவும். களைந்த சாமை அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். வெள்ளத்தை தூள் செய்து, தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்து சூடு காட்டவும். வெல்லம் நன்கு கரைந்து விடும். வெல்லம் கரைந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, வடி கட்டவும். வெள்ளத்தில் உள்ள தூசி, மண் ஆகியவை நீங்கி விடும். ஆர்கானிக் வெல்லம் பயன் படுத்தினால் இந்த வேலையில்லை. நேரடியாக வெல்லத்தை பொடித்து உபயோகப் படுத்தலாம்.
முந்திரி, பாதாம் மற்றும் மற்ற பருப்பு வகைகளை பொடிப் பொடியாக உடைக்கவும்.
அரை மணி நேரம் ஊறியதும், சாமை அரிசியை நீர் விட்டு வேக வைக்கவும். சாத பதம் வந்ததும் இறக்கவும்.
பாலை நன்கு கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்ததும், சாமை சாதம், வெல்ல கரைசல், இவற்றை சேர்த்து, பால் சுண்டும் வரை கொதிக்க விடவும்.
பால் சுண்டி, அளவு குறைந்ததும், உடைத்த முந்திரி பருப்பு வகைகளையும், உலர்ந்த திராட்சையையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கியதும், சிறிது முந்திரி, பாதாம் பருப்புகளை தூவவும். சத்து மிக்க, சுவையான சாமை பாயசம் தயார்.
No comments:
Post a Comment