வெள்ளை கொண்டை கடலை மசாலா சுண்டல் (காபுலி சன்னா சுண்டல்) |
தேங்காய் -சிறிது
சீரகம் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
வர மிளகாய் - 3.
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்.
கடலை பருப்பு - 1 ஸ்பூன்.
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை -சிறிது
உப்பு -தேவைக்கு
வெள்ளை கொண்டை கடலையை, மூழ்குமளவு தண்ணீரில் போட்டு, ஒரு கொதி விட்டு, மூடி வைத்து விடவும். 6-7 மணி நேரம் கழித்து, ஊறிய வெள்ளை கொண்டை கடலையை வேக வைக்கவும். முக்கால்வாசி வெந்த பிறகு, உப்பு சேர்த்து, திரும்பவும் வேக வைக்கவும். நசுக்கினால் மாவாகும் பதம் வரும் வரை வேக வைக்க வேண்டும். வெந்த பின், நீரை ஓட்ட வடித்து வைத்து விடவும்.
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வர மிளகாய் மூன்றையும் சிவக்க வறுக்கவும். ஆறிய பிறகு, தேங்காய் துருவல், சீரகம்
பச்சை மிளகாய் சேர்த்து கொர, கொரப்பாக அரைக்கவும்.
வாணலியில், எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை தாளிக்கவும். கருவேப்பிலை சேர்த்து ஒரு பெரட்டு பெரட்டவும்.
நீர் வடித்த வெள்ளை கொண்டை கடலையை , வாணலியில் போட்டு, அரைத்த பொடியும் சேர்த்து ஒரு பெரட்டு பெரட்டி, அடுப்பை அனைத்து விடவும்.
சுவையான வெள்ளை கொண்டை கடலை சுண்டல் தயார்.
கொலு கொண்டாட்டம் |
No comments:
Post a Comment