தலைவாழை விருந்து 50 வது போஸ்ட் |
சாமை புலாவ்
சாமை அரிசி |
உருளை கிழங்கு |
நிலக் கடலை |
சாமை - 150 கிராம்
உருளை கிழங்கு - 3 (நடுத்தர அளவில்)
நிலக் கடலை - 50 கிராம்
பட்டை - சிறிதளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1
முந்திரி - சிறிது
பாதாம் பருப்பு - சிறிது
கருவேப்பிலை
கொத்தமல்லி இலை
நெய்
உப்பு
எலுமிச்சை சாறு
சாமை அரிசி பார்க்க முத்து போல் இருக்கும்.
செய்முறை
சாமை அரிசியை சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற வைக்கவும்.
உருளை கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உடைத்து கொள்ளவும்.
நிலக் கடலையை வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் , பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம் - இவற்றை போட்டு, வாசனை வரும் வரை லேசாக சூடு காட்டவும். பின் இவற்றை மிக்சியில் போட்டு நன்றாக பொடிக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி, பொடித்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம் கலவையை போட்டு, சற்று நேரம் கிளறவும்.
பிறகு இஞ்சி, பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து, சற்று நேரம் கிளறவும்.
உடைத்த உருளை கிழங்கு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - இவற்றையும் போட்டு 5 நிமிட நேரம் நன்கு கிளறவும்.
பின் நிலக்கடலை பொடி, நீர் வடித்த சாமை அரிசி இவற்றை போட்டு சிறிது நேரம் கிளறவும்.
அரை லிட்டர் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கருக்கு மாற்றவும்.
5 விசில் விடவும்.
15 நிமிடம் கழித்து குக்கரிலிருந்து இறக்கவும்.

முந்திரி, பாதாம் இவற்றை நெய்யில் வறுத்து, சாமை புலாவ் மீது தூவவும். சிறிது கொத்தமல்லி இலைகளையும் தூவலாம். எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
இப்போது சாமை புலாவ் ரெடி.
இப்போது சாமை புலாவ் ரெடி.
இதற்கு வெள்ளரி தயிர் பச்சடி தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
குறிப்பு:
வெங்காயம், பூண்டு இல்லாமலே, சாமை புலாவ் சுவை நன்றாக இருந்தது. புலாவ் பிரியர்கள் சிலரிடம் டேஸ்ட் பார்க்க சொன்னோம். '' வழக்கமான புலாவை விட நன்றாக இருக்கிறது '' என்றார்கள். உங்கள் கருத்து என்ன? செய்து பார்த்து, சுவைத்து பார்த்து சொல்லுங்கள்.

No comments:
Post a Comment