வெள்ளரி தயிர் பச்சடி |
வெள்ளரி
கொத்தமல்லி இலை
சீரக பொடி
சாட் மசாலா பொடி
உப்பு
வெள்ளரியை தோல் சீவி, பொடி பொடியாக நறுக்கவும். ஒரு டம்ப்ளர் அளவு தயிர் எடுத்து, மிக்சியில் போட்டு அடிக்கவும். தயிர் நன்கு கலந்து, ஏடு, தண்ணீர் இல்லாமல் இருக்கும். இந்த தயிரில் நறுக்கிய வெள்ளரியை போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு கலக்கவும். இதன் மீது, கொத்தமல்லி இலைகள், சீரக பொடி, சாட் மசாலா பொடியை தூவவும். அனைவரும் விரும்பக் கூடிய வெள்ளரி தயிர் பச்சடி தயார்.
புலாவ் , சாமை புலாவ்,வெஜிடபிள் பிரியாணி, வங்கி பாத் இவற்றிற்கு ஏற்ற துணை உணவு, வெள்ளரி தயிர் பச்சடி. உடல் எடை குறைக்க விரும்புவோர், வழக்கமான காலை, மதிய உணவுக்கு முன், வெள்ளரி தயிர் பச்சடி சாப்பிடலாம். சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்களும், சர்க்கரை நோய் வந்து விடுமோ என்று நினைப்பவர்களும், வெள்ளரி பச்சடி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
கொழுப்பு சத்து குறைக்கப்பட்ட பால் பவுடர் (Skimmed Milk Powder) உபயோகித்து தயிர் தயாரிப்பது உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது. இந்த தயிர் நல்ல கெட்டியாகவும் இருக்கும். Amul Brandல் வரும் Sagar Skimmed Milk Powder கொழுப்பு சத்து குறைவான தயிர் (Diet Curd, Slim Curd) தயாரிப்பிற்கு ஏற்றது. மற்ற Brandsஐ விட விலையும் குறைவு.
Aavin Skimmed Milk Powderம் விலை குறைவு. தரம் அதிகம். அதேபோல், aavin double toned milk (Pink colour milk sachet)ம் பயன் படுத்தலாம்.
வழக்கமாக நீங்கள் உபயோகிக்கும் பாலையும், ஆடை நீக்கி தயிர் தோய்க்கலாம்.

No comments:
Post a Comment