சில வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக, மகாராஷ்டிராவில், நவராத்திரி விரதத்தின் போது, சாமை அரிசியில் செய்த உணவை விரும்பி உண்கிறார்கள். அவர்களுக்கு, சாமை விரத கால உணவு. நல்லவை எவ்வளவு தொலைவிலிருந்து வந்தாலும், விரும்பி ஏற்கலாமே?
சாமை தோசை |
சாமை மாவு
தக்காளி
பச்சை மிளகாய்
மிளகு, சீரக பொடி
உப்பு
ஒரு டம்ளர் சாமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கவும். மிளகு, சீரகபொடி கலந்து நீர் விட்டு கரைக்கவும்.தோசை மாவு பதம் வருமளவில் தண்ணீர் சேர்க்கவும். தோசை கல்லை சூடாக்கி வார்க்கவும். ஒரே சீராக ஊற்ற வேண்டும். கரண்டியால் தேய்க்கக் கூடாது.
சாமை மாவு +தக்காளி+பச்சை மிளகாய்+ மிளகு, சீரக பொடி+உப்பு |
ஆர்கானிக் பொருட்கள் விற்கும் கடைகளில், சாமை மாவு கிடைக்கும்.மிளகு, சீரக பொடி தயார் செய்து வைத்துக் கொண்டால் நொடியில் ரெடி சாமை தோசை.
சாமை மாவை கரைத்த உடனே தோசை வார்க்கலாம்.காத்திருக்க தேவையில்லை.
சாமை தோசை சுவை மிக நன்றாக வந்திருந்தது.
வழக்கமாக தோசைக்கு தொட்டுக் கொள்ளும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி துவையல், தோசை மிளகாய் பொடி....இவற்றில் ஏதாவது ஒன்றை தொட்டு சாப்பிடலாம். மிளகு, சீரக பொடியும், தக்காளியும் சேர்ப்பதால் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலே கூட சாமை தோசையை சாப்பிடலாம்.
No comments:
Post a Comment