பாசி பருப்பு சுண்டல் |
தேவையான பொருள்கள்
பாசி பருப்பு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
வர மிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிது.
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
உப்பு
சீரகம் - விருப்பப்பட்டால்
தேங்காய் - விருப்பப்பட்டால்
வர மிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிது.
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
உப்பு
சீரகம் - விருப்பப்பட்டால்
தேங்காய் - விருப்பப்பட்டால்
250 மி.லி. அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க விடவும். பிறகு, தேவையான அளவு உப்பை போட்டு, பாசி பருப்பையும் போடவும். உப்பு போட்டு வேக வைத்தால் தான், பாசி பருப்பு குழையாமல், உதிர், உதிராக இருக்கும்.
ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, ஒரு தட்டை போட்டு மூடி வைக்கவும். 20 நிமிடம் கழித்து, தண்ணீரை வடிக்கவும்.
ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, ஒரு தட்டை போட்டு மூடி வைக்கவும். 20 நிமிடம் கழித்து, தண்ணீரை வடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வரமிளகாய் போட்டு தாளிக்கவும். பச்சை மிளகாய் கருவேப்பிலை இரண்டையும் போட்டு, ஒரு பெரட்டு பெரட்டி, நீர் வடித்த பாசி பருப்பையும்போட்டு கிளறவும்.
அடுப்பை அணைத்து, பின் துருவிய தேங்காயை தூவவும். நவராத்திரி மட்டுமன்றி எல்லா நாட்களிலும் எளிதாக செய்யக் கூடிய , பாசி பருப்பு சுண்டல் ரெடி.
பாசி பருப்பு சுண்டல் |
No comments:
Post a Comment