பண்டிகை காலத்தில் சக்கரை பொங்கல் செய்வது நம் வழக்கம். இந்த நவராத்திரி சீசனில் வரகு சக்கரை பொங்கல் செய்து பாருங்களேன்.
வரகு சக்கரை பொங்கல் |
வரகு |
வரகு -100 கிராம்
பாசி பருப்பு- 25கிராம்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்-சிறிது
வெல்லம்- 50 கிராம்
முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர்ந்த திராட்சை - சிறிது
- வரகு மற்றும் பாசிபருப்பை களைந்து குக்கரில் வேக வைக்கவும்.
- வெல்லத்தை மண் நீக்கி இளம் பாகாக எடுத்துக் கொள்ளவும்.
- வாணலியை சூடாக்கி, நெய் விட்டு, முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை..... இவற்றை வறுக்கவும்.
- வரகு, பாசி பருப்பு கலவையை சேர்க்கவும்.
- பின்னர் வெல்லப்பாகையும் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி, பிஸ்தா பருப்புகளை, இரண்டு துண்டுகளாக குறுக்கே நீள வாக்கில் வெட்டி, தூவவும்.
சுவையான வரகு இனிப்பு பொங்கல் தயார்.
1 comment:
nice recipe...
Post a Comment